வாகீஸ்வரர்-சுவாந்தர நாயகி

தத்தசோழன் தம்பதி

பைரவர்கள்

சிவனை வழிபடும் சரஸ்வதி

தத்தசோழன்

தத்தசோழன் சோழ மன்னர்களுள் ஒருவனாவான் குஷ்டரோக நோய் வந்து அவதியுற்றான். உடலில் குஷ்டரோக உள்ளவர்கள் இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல்- வாகீஸ்வரசுவாமியை வியாழன் அன்று விரதமிருந்து இங்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினால் விரைவில் நலமடைவதாகவும் மருத்துவர்கள் கூறினர். தத்தசோழன் பெருஞ்சேரி வந்து வழிபட்டு நோய் நீங்கி நலமடைந்தான். இவன் ஆட்சிக் காலத்தில் ஒரு போர் நடந்தது, அப்போரில் உடல் நலக்குறைவினால் கலந்து கொள்ள முடியாத தவிர்க்க முடியாத நிலையில் இத்தலத்து இறைவி சுவாதந்தரநாயகியை வேண்டி நிற்க, இறைவி சுவாதந்தரநாயகி தத்தசோழனுக்காக போரில் கலந்து வெற்றியை நிலை நாட்டினார். தத்தசோழன் வெற்றித் தெய்வத்தினை தன் மனைவியுடன் வணங்கும் சிலை இத்திருக்கோயிலில் உள்ளது.