சந்திரன்
தன் குருவின் மனைவி தாரையை அபகரித்தால் சந்திரன் புராணங்களில் குருதுரோகி என்று அழைக்கப்படுகிறான். குருவுக்கு துரோகம் செய்த முதல் சிஷ்யனுமாகிறான். பின் பிரம்மன் சந்திரனுக்கு அறிவுரை கூறி தாரையை சந்திரனிடமிருந்து பிரித்து பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார். சந்திரனும் தன் நிலை அறிந்து இக்குருத்துரோக செயலுக்கு மனம் வருந்தி வியாழனிடம் சாப விமோசனம் வேண்டினான். மனம் இரங்கிய வியாழன் "திருமுல்லைவாயில் சென்று மானதத்தீர்த்தமாடியும், தாருகாவனமான பெருஞ்சேரிக்கு சென்று ஞானதீர்த்தமாடிம் இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும்" என்றான். அதன்படி சந்திரனும் அவ்வாறே திருமுல்லைவாயிலுக்கு, சென்று வழிபட்டு, பின் பெருஞ்சேரிக்கு வந்து லிங்கத்திருமேனியை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவமிருந்து இறைவனை வழிபட்டதால் குஷ்டம் நீங்கி பாபவிமோசனம் பெற்றார்.
வியாழனின் விருப்பப்படி தாரையும் இத்தலத்து இறைவன் வாக்கு நல்கிய வள்ளல்- வாகீஸ்வரசுவாமியை வணங்கி பாபவிமோசனம் பெற்று கணவரான வியாழனிடம் சேர்ந்து தூய்மை அடைந்ததார்.