வாகீஸ்வரர்-சுவாந்தர நாயகி

சுவாந்தர நாயகி

பைரவர்கள்

சிவனை வழிபடும் சரஸ்வதி

சரஸ்வதி

சரஸ்வதி தேவிக்கு வாக்கு வன்மையளிக்கும் பேற்றை தந்த வாகீஸ்வர ஸ்வாமி பிரம்மதேவனின் மானஸ புத்திரர்களில் ஒருவனான தட்சன். இவன் பிரம்மனின் கட்டை விரலில் தோன்றியவன் என்கின்றன புராணங்கள். இரண்யன், ராவணன் ஆகியோரைப்போன்ற ஒரு வீரன், தீரன், பண்டிதன்தான் இந்த தட்சன். ஆரம்பத்தில் ஒரு சிறந்த சிவபக்தனாக இருந்தான். தனது கடும் தவத்தால், வரங்கள் பல பெற்று வாழ்ந்து வந்தான். தட்சன் பலவிதமான பராக்கிரமங்களைக்கொண்ட பிரஜாபதிகளில் ஒருவன்., இவனுடைய மனைவிகள் வேதவல்லி (மறைக்கொடி), அசிக்னி (பிரசுதி) ஆகியோர். அவர்களுடைய வாழ்க்கை நன்றாக அமைந்தது. இவர்களுக்கு மொத்தம் அறுபது மகள்கள் எனவே தங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் பார்வதிதேவி, ரோஹிணி, கார்த்திகை உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள் மற்றும் ரதி. பார்வதிதேவி தட்சனின் குழந்தை என்பதால் ‘தாட்சாயணி’எனவும் அழைக்கப்பட்டார்.

வேதவல்லிக்கு எல்லாக்குழந்தைகளையும் விட, தாட்சாயணி மீது அதிக பாசம். ஆகையினால் மிகுந்த அன்புடன் வளர்த்தாள். தாட்சாயிணி சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டமையால், உமாதேவியை மகளாகப்பெற்ற தட்சன் சிவபெருமானுக்கு மாமன் ஆனான்.

அதனால் அவனது அகந்தை தலைக்கு ஏறியது. தாட்சாயிணி தன் தந்தை தட்சனின் விருப்பத்திற்கு மாறாக சிவனை திருமணம் செய்து கொண்டமையால், சிவபெருமான் தனது மருமகனாக இருந்தும் அவருக்கு மதிப்பளிப்பது இல்லை. இறைவனான சிவபெருமானை விட தானே உயர்ந்தவன் என்ற இறுமாப்பும் கர்வமும் உடையவன். தான் என்ற அகம்பாவம் தட்சனிடம் மேலோங்கி இருந்த காலகட்டம்.

அப்போது தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான். இந்த யாகத்திற்கு “சிவனை நீக்கி ஒரு யாகம் செய்யப்போகிறேன் . எல்லோரும் வாருங்கள்”, என முப்பத்து முக்கோடி தேவர்ககள், சித்தர்கள், அரசர்கள், பெரும் புலவர்கள் என உலகிலுள்ள எல்லாருக்கும் அழைப்பு விடுத்தான். தனது மருமகனான சிவபெருமானையும் மகள் பார்வதி தேவியையும் அழைக்கவில்லை. மகாவேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அதுமட்டுமன்றி சிவனுக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தையும் தரமறுத்தான். இவ்விஷயம் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் எட்டியது. இறைவனை அழைக்காமல் மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத்திற்கு நாம் மட்டும் எப்படிச்செல்லமுடியும் என்ற விவாதம் எழுந்தது. உடனே தேவசபை கூடியது. சிவபெருமானை அழைக்காதது பற்றி விவாதித்தனர். இறுதியாக பிரம்மதேவன் உட்பட யாருமே தட்சன் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்வதில்லை என முடிவெடுத்தனர்.

ஆனால் தட்சன் யாகம் ஆரம்பித்தவுடன், "தட்சன் சிவபெருமானை விட செல்வாக்கு படைத்தவன் முன்கோபக்காரன். நாம் யாகத்தில் கலந்து கொள்ளாவிட்டால் நம்மைப்பழிவாங்கிவிடுவானோ என்று பயந்து, பிரம்மன் உட்பட தேவர்கள், முனிவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் சொல்லாமல் ஒவ்வொருவராக நழுவிச்சென்று தட்சனின் யாகத்தில் கலந்துகொள்ள தங்கள் பத்தினிமார்களுடன் யாகசாலையில் கூடிவிட்டனர். பிரம்மாண்டயாகசாலை. மகரிஷிகள் மந்திரகோஷம் செய்ய, தேவர்களும் தேவியரும் வீற்றிருக்க, பிரம்மதேவனே முன்னின்று தட்சனின் யாகத்தைத்தொடங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் பார்வதிதேவி தனது தகப்பன் நடத்தும் யாகத்தின் பெருமைகளை நாரதர் மூலம் கேள்விப்பட்டு, பிறந்த வீட்டுப்பாசம் காரணமாக அந்த யாகத்தில் கலந்து கொள்வது என்று முடிவு செய்து தனது கணவரான சிவபெருமானிடம் உத்தரவு கேட்டார்.

"நம்மை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத்திற்கு நீ செல்லக்கூடாது'' என்று சிவபெருமான் தடுத்தார். பெருமானின் கட்டளையையும் மீறி பிறந்த வீட்டின் பெருமையை எண்ணி பார்வதிதேவி தகப்பன் தட்சன் நடத்தும் யாகச்சாலைக்கு வந்தார். தாட்சாயணி தட்சனைப்பார்த்து தந்தையே.. “மாமன் வீட்டில் விழா என்றால் முதல் அழைப்பு மருமகனுக்குத்தானே? சாதாரண குடிமகனுக்கு தெரிந்த இந்த நீதி உங்களுக்கு தெரியவில்லையா? என்றார். அதைக்கேட்ட தட்சன் அடங்கா சினம் கொண்டான். என்னை மதிப்பவர்களை நான் மதிப்பேன். என்னை மதிக்காதவர்களை எதிர்க்க தயங்கமாட்டேன் என்று இருமாப்புடன் கூறினான் அவன். அதனைக்கேட்ட தாட்சாயணி கடுமையுடன் “ சிவபெருமான் உங்கள் மருமகன் என்று குறுகிய எண்ணத்தோடு நோக்க வேண்டாம். அகிலலோகத்துக்கும் அதிபதி அவர். அவரை அவமதித்து அவனிலே வாழமுடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவிர்பாகம் அளித்து ஆணவத்தை விடுங்கள் என்றார்”. தட்சனின் கோபம் தலைக்கேறியது. 'இங்கு ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்?’ என்று சொல்லி மகள் என்றும் பாராமல் அவமானப்படுத்தினான் தட்சன். கூடியிருந்த எல்லோரது முன்னிலையிலும் ஈஸ்வரனை பிட்சாண்டி என்றும், சுடுகாட்டில் சுற்றித்திரியும் பித்தன் என்றும், பேய் என்றும், சுடலைகாப்பவன் என்றும், தேவர்சபையில் இருக்கத்தகுதியற்றவன் என்றும் நிந்தித்தான் தட்சன். இதைக்கேட்டு கோபம்அடைந்த சதிதேவி. 'சிவனை நிந்தித்ததால், நீ செய்ய நினைத்த காரியம் நிறைவேறாமல் போகட்டும். தர்மம் தவறிய உன் யாகம் பாதியில் நிற்கட்டும். இந்த யாகசாலை அழியட்டும். சிவ நிந்தனைக்குத்துணை நின்றவர்கள் அனைவரும் துன்பத்தை அனுபவிக்கட்டும்’என்று சாபமிட்டு. ஆவேசத்துடன் கயிலைக்குத்திரும்பி. தட்சனுக்கு அறிவு புகட்டும் வகையில் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினார். நீண்ட நேர விவாதத்திற்குப்பின் இறைவன். சிவபெருமான் கடும் சினத்துடன் நெற்றிக்கண்ணைத்திறந்தார். அவரது கண்டத்திலிருந்த விஷத்தின் ஒரு கூறு அவரது நெற்றிக்கண் வழியாக வெளிப்பட்டது வீரபத்ரக்கடவுள் தோன்றினார். தட்சனிடம் சென்ற வீரபத்ரன் “தட்சனே! வேள்விக்குத்தலைவராகிய எங்கள் சிவபெருமானுக்குரிய அவிர்பாகத்தைக்கொடு. ஏன் வீணாக அழிகிறாய்?” எனக்கேட்டும் தட்சன் உடன்படவில்லை. சிவபெருமானை மேலும் இகழ்ந்தான். உக்கிரமூர்த்தியான வீரபத்திரருக்கு சினம் பொங்கியது. யாகத்தையே அழிக்கத்தொடங்கினார். தேவர்கள் ஓட ஆரம்பித்தனர். வீரபத்திரர் சும்மா விடுவாரா? சந்திரனை காலால் தேய்த்தார். சூரியனின் பல்லை உடைத்தார். அக்னியின் கையை முறித்தார். ‘அவி உண்ட நாக்கினைக்காட்டு’எனக்கூறி அவனது ஏழுநாக்குகளையும் அறுத்து எறிந்தார். இமயனைப்பிடித்து அவன் தலையை அறுத்தார். குயில் வடிவம் எடுத்து ஓடிய இந்திரனைப்பிடித்து அவனது சிறகுகளை சின்னா பின்னாமாக்கினார். அஞ்சி ஓடிய நிருதியைப்பார்த்து “நில்” எனச்சொல்லி தண்டினால் அடி கொடுத்தார். மழுவினால் வாயுதேவனை அடித்தார். முத்தலை சூலத்தால் குபேரனை மோதி தண்டித்தார். இப்படிபலரையும் தண்டித்து வீரபத்ரர் யாகத்தைச்சிதைத்துக்கொண்டிருந்த போது பிரம்மதேவன் தனது மனைவி சரஸ்வதியுடன் அகப்பட்டுக்கொண்டார். யாராக இருந்தால் என்ன? பிரம்மனைப்பிடித்து இழுத்து தலையில் இடி விழுந்தது போல் சீங்கிக்குட்டினார். அவ்வளவு தான். தலைகுனிந்து வணங்குபவனைப்போல் பூமியில் விழுந்தார் பிரம்மன். அருகே நின்ற சரஸ்வதியின் மூக்கினை அறுத்து அவமானப்படுத்தினார். பின்னர் வாளினால் தக்கன் தலையை அறுத்தார். அது கீழே விழாதபடி தாங்கி அக்னியில் இட்டார்.

அத்துடன் அருகே இருந்த ஆட்டின் தலையை எடுத்து தக்கன் உடலில் பொருத்தினார். வீரபத்திரனால் பாதிக்கப்பட்ட சரஸ்வதி தன் நிலையைக் கண்டு வேதனைப்பட்டாள். கணவரிடம் கூறிப் புலம்பினாள். தவத்தால் எதையும் அடையலாம் என்று பிரம்மா கூற, சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்தாள். இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை நோக்கி பல ஆண்டுகள் தவமிருந்தாள். சரஸ்வதி தன் முன் தோன்றிய சிவபெருமானிடம், எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டி வரம் பெற்றாள்.

சரஸ்வதி பெருஞ்சேரிக்கு வந்து இங்கு கோயில் கொண்டிருக்கும் வாகீஸ்வர சுவாமியை நோக்கி தவமிருக்கத்தொடங்கினார். பலஆண்டுகள் தவத்திற்கு மனமிரங்கி சரஸ்வதி முன் தோன்றி. ‘என்ன வேண்டும் கேள்?’ என்றார் சிவபெருமான். “எனது அங்க குறைபாடு நீங்க வேண்டும், எல்லோருடைய நாவிலும் வீற்றிருந்து வாக்கு விருத்தியளிக்கும் பேற்றை எனக்குத்தந்தருள வேண்டும்”என்று சரஸ்வதிதேவி வேண்ட ‘அப்படியே ஆகட்டும்’என இறைவன் அருள் புரிந்தார். சரஸ்வதி வாக்கு வன்மையளிக்கும் பேற்றையும், இழந்த மூக்கை மீண்டும் பெற்று . கணவரான பிரம்ம தேவரைச்சேர்ந்தார். இப்படி கல்விக்கு அரசியான சரஸ்வதிதேவிக்கு அருள் புரிந்தவர் தான் நம் பெருஞ்சேரி வாகீஸ்வரர்.